சென்னை ஐஐடிக்கு சிறப்பு அந்தஸ்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

சென்னை ஐஐடிக்கு சிறப்பு அந்தஸ்து

சிறப்பாக செயல்படும் 20 மத்திய, மாநில, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க யுஜிசி பரிந்துரைத்துள்ளது. இதில், சென்னை ஐஐடி.யும் இடம் பெற்றுள்ளது.


கல்வி நிறுவனங்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்தும் வகையில், சிறப்பு அந்தஸ்து வழங்கும் திட்டத்தை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2017ல் அமல்படுத்தியது.


இதற்கான பரிந்துரைகளை பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி) வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிறப்பு அந்தஸ்துக்கு 20 கல்வி நிறுவனங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதில், சென்னை ஐஐடி இடம் பெற்றுள்ளது.


இது தவிர, டெல்லி பல்கலைக் கழகம், பிஎச்யு, ஐதராபாத் பல்கலைக் கழகம், ஐஐடி கராக்பூர், ஜாமியா ஹம்தார்த் பல்கலை., ஓ.பி.ஜிண்டால் குளோபல் பல்கலைக் கழகம், சிவ் நாடார் பல்கலைக் கழகம் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.


இப்பட்டியலில் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம், தேஷ்பூர் பல்கலைக் கழகம் மற்றும் அசோகா பல்கலைக்கழகம் ஆகிய முக்கிய சில கல்வி நிறுவனங்கள் இடம் பெறாதது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment