சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, August 11, 2019

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை: ஐகோர்ட் உத்தரவு

சேர்க்கை ரத்து செய்யப்பட்ட மாணவிக்கு என்ஐடியில் உயர்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் மீண்டும் சேர்க்கை வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.


திருச்சி, திருவரங்கத்தை சேர்ந்த சிவகாமசுந்தரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனு: திருச்சி என்ஐடியில் படிப்பதற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் பங்கேற்றேன்


. இதில், பிடெக் பிரிவில் மெரிட்டில் தேர்வானேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீட்டின் கீழ் எனக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.  சமூக நீதித்துறை அமைச்சக அறிவிப்பின்படி, கடந்த 2017-18க்கான வருமான சான்று அளித்திருந்தேன்.


ஆனால், திடீரென எனக்கு வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது. அதில், நடப்பு நிதியாண்டில் 1.4.2019 கணக்கிட்டு வருமான  சான்றிதழ் தாக்கல் ெசய்யவில்லை என்பதால் சேர்க்கையை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் இந்தாண்டு தான் அமலானது


இதற்கான அறிவிப்பில், நடப்பு ஆண்டிற்கான சேர்க்கைக்கு கடந்த 2017-18ம் நிதியாண்டு கணக்கீட்டின்படி வருமான சான்றிதழ் தாக்கல் செய்தால் போதுமென்றே கூறப்பட்டுள்ளது. அதன்படியே தாக்கல் செய்தேன்.


தற்போதைய நிதி ஆண்டை  கணக்கிட்டு இப்போது சான்றிதழ் தாக்கல் செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, எனக்கு திருச்சி என்ஐடியில் வழங்கப்பட்ட சேர்க்கையை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சேர்க்கை வழங்க உத்தரவிட  ேவண்டும்.


இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு கடந்த 2017-18ம் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் வருமான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மனுதாரருக்கு 2 வாரத்தில் மீண்டும்  வருமான சான்றிதழ் வழங்கி, என்ஐடியில் மீண்டும் சேர்க்கை வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment