தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 30, 2019

தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு


தேசிய வளிமண்டல ஆராய்ச்சி ஆய்வகத்தில் விஞ்ஞானி மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NARL/RMT/SC & SD/02/2019 
பணி: Scientist/Engineer (SD) - 01
சம்பளம்: மாதம் ரூ.67,700 + இதர சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: முதல் வகுப்பில் இயற்பியல், வளிமண்டல அறிவியல், விண்வெளி இயற்பியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், முனைவர் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Scientist/Engineer (SC) - 01 
சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும். தகுதி: முதல் வகுப்பில் பொறியியல் துறையில் எம்.டெக் முடித்திருப்பதுடன் மின்காந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்ற பொறியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.narl.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:"The Administrative Officer (R&R), National Atmospheric Research Laboratory, P.B. No.123, S.V. University, Post Office, Tirupati - 517502, Andhra Pradesh"
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.narl.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.09.2019

No comments:

Post a Comment