பணப்பரிவர்த்தனை மோசடியை தடுக்க கூகுள் பே செயலியில் கூடுதல் பாதுகாப்பு வசதி அறிமுகம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, August 2, 2019

பணப்பரிவர்த்தனை மோசடியை தடுக்க கூகுள் பே செயலியில் கூடுதல் பாதுகாப்பு வசதி அறிமுகம்

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை மேலும் பாதுகாப்பாக மாற்று வதற்கு கூகுள் பே நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.


இதன்படி இனி கூகுள் பே செயலி மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது அந்த பரிவர்த்தனை தொடர்பான முன் னெச்சரிக்கை விவரங்கள் வாடிக் கையாளர்களின் மொபைல் எண் ணுக்கு குறுந்தகவலாக (எஸ்எம்எஸ்) அனுப்பபடும்.


இத னால் டிஜிட்டல் பணப்பரிவர்த் தனையின் போது ஏற்படும் மோசடி கள் தடுக்கப்படும் என்று கூறப் படுகிறது.

இதுகுறித்து கூகுள் பே -யின் இயக்குநர் அம்பரிஷ் கென்கி கூறியதாவது:


 நாங்கள் எங்கள் நிறுவனத்தின் செயலியை பயன் படுத்தும் வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனை பாதுகாப்பில் மிகக் கவனமாக உள்ளோம்.அந்த பாதுகாப்பை மேலும் அதிகரிக் கும் நோக்கத்துடன் தற்போது புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

அதன்படி, இனி கூகுள் பே செயலி வழியே பணப்பரிவர்த் தனை மேற்கொள்ளும்போது அந்த பரிவர்த்தனை தொடர்பான முன் னெச்சரிக்கை விவரங்கள் வாடிக் கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்


. இதன் மூலம் தவறுதலாக மேற் கொள்ளப்படும் பணப்பரிவர்த் தனை தடுக்கப்படும். இது தவிர்த்து கூகுள் பே பல்வேறு பாதுகாப்பு சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. வாடிக்கை யாளர்களின் நம்பிக்கை எங் களுக்கு மிக முக்கியம்' என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment