பட்ஸ் மூலம் காது குடைகிறீர்களா? மூளைத் திசுக்களுக்கு ஆபத்து! | Cleaning Ear with Cotton Buds Can leads to Brain Infection - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 21, 2019

பட்ஸ் மூலம் காது குடைகிறீர்களா? மூளைத் திசுக்களுக்கு ஆபத்து! | Cleaning Ear with Cotton Buds Can leads to Brain Infection

காதுக்குள் பட்ஸ் செல்லும் போது ஒரு மெல்லிய உணர்வு ஏற்படும் அது நம்மை மீண்டும் மீண்டும் காதை சுத்தப் படுத்த தூண்டிக்கொண்டே இருக்கும்.



ஒருசிலருக்கு காட்டன் பட்ஸைப் பார்த்தால் போதும் காதில் அழுக்கு இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டுவிடும். அதில் அழுக்கு இருக்கிறதோ இல்லையோ தினமும் பட்ஸ் கொண்டு காதை சுத்தப்படுத்திக்கொண்டே இருப்பர்.

காதுக்குள் எந்த விதமான பொருட்களையும் விடுவது ஆபத்து. அது ஒரு மெல்லிய உறுப்பு.


இந்த காது குடையும் பழக்கத்தால் தனது கேட்கும் திறனை இழந்ததோடு, மாபெரும் நரம்பியல் பிரச்னைக்கு ஆளாகியுள்ளார் ஆஸ்திரேலியப் பெண் ஒருவர்தட்ஸ் லைப்' எனும் ஆஸ்திரேலியப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, ஜாஸ்மின் எனும் 32 வயது பெண் ஒருவர் தனது காதுகளை தினமும் படுப்பதற்கு முன் பட்ஸ் மூலம் சுத்தம் செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.



 நாட்கள் செல்லச் செல்ல இவரது இடது காதில் கேட்கும் திறன் குறைந்துள்ளது. ஆரம்பத்தில் மருத்துவர்கள் இதனை தொற்று எனக் கருதியுள்ளனர்.


ஆனால் இவருக்கு சில நாட்களில் காது கேட்கும் திறன் முற்றிலுமாக குறைந்துள்ளது. ஒரு நாள் காதை சுத்தப்படுத்தும்போது அதில் இரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது செவிப்பறைக்குப் பின்னால் இருக்கும் மூளைத் திசுக்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


தினமும் பட்ஸ் கொண்டு காதைச் சுத்தப்படுத்தும்போது, பஞ்சுத் துகள்கள் காதுக்குள் சென்றுள்ளன. இது நாட்பட தொற்றாக மாறி மூளைத் திசுக்களைப் பாதித்துள்ளது.

"ஜாஸ்மின் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கு சிகிச்சை எடுத்திருக்க வேண்டும்" என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


 தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பாதிக்கப்பட்ட திசுக்களை மட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

இந்த காட்டன் பட்ஸ்களால் அவருக்கு காது கேட்கும் திறன் இல்லாமல் போனதுடன் மூளைத் திசுக்களும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.


பொதுவாக பட்ஸ்களைக் கொண்டு காதை சுத்தப்படுத்துவது தவறானதே. இவை காதுக்குள் செல்லும்போது காதுகளில் தூசுகளைத் தடுக்க உற்பத்தியாகும் மெழுகு போன்ற திரவத்தையும் எடுத்துவிடும். இதனால் காதுக்குள் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்

No comments:

Post a Comment