IAS, IPS தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, August 28, 2019

IAS, IPS தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எழுதுபவர்கள் இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற அகில இந்திய குடிமை பணிகளில் சேர மத்திய தேர்வாணை குழு முதல் நிலை தேர்வுகளை 31.5.2020-ல் நடத்தவுள்ளது.


இந்த தேர்வுகளில் வெற்றிபெற, தமிழ்நாட்டை சேர்ந்த பட்டதாரி/முதுநிலை பட்டதாரிகளுக்கு தமிழக அரசு, கட்டணம் ஏதுமின்றி, ஆறுமாத கால உண்டு உறைவிடப் பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சி சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில்  உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் அளிக்கப்படும்.

 ஆர்வமும், தகுதியும் உள்ள தமிழக இளைஞர்கள் இப்பயிற்சினை பெற்று, வெற்றி பெறலாம். பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு 13.10.2019 அன்று தமிழகத்தில் 20 மையங்களில் நடைபெறும்.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்  16.09.2019 (பிற்பகல் 6 மணி) ஆகும். கூடுதல் தகவல்களை www.civilservicecoaching.com என்ற இணையதள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment