நடத்துனர்களுக்கு MTC நிர்வாகம் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, August 17, 2019

நடத்துனர்களுக்கு MTC நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் உள்ள நடத்துனர்கள் பணிநேரத்தில் ஓட்டுனர்களுடன் பேசுவதற்கு நிர்வாகம் தடை விதித்துள்ளது.


மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழக  அரசுப்போக்குவரத்துக்கழகத்தில் சுமார் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் பஸ்கள், பல்வேறு காரணங்களால் அவ்வப்ேபாது விபத்துக்குள்ளாகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அரசு பஸ்கள் விபத்தில்  சிக்கியதில் மட்டும் 7,888 பேர் இறந்துள்ளனர்.


அதன்ஒருபகுதியாக மாநகரப்போக்குவரத்துக்கழகத்தில் பணியின் போது நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட கழகத்தின் பாதுகாப்பு  மற்றும் பயிற்சி பிரிவு சார்பில், அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல, மேலாளர்கள் வருவாய் பிரிவு அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


பேருந்துகளில் பாதுகாப்பான இயக்கத்திற்கு பேருந்தின்  நடத்துனரும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.


 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் காலை வேளைகளிலும், மதிய முறை மாற்ற வேளைகளிலும் பணியினை துவக்கி தடத்தில் செல்லும்போது, பேருந்து ஓட்டுனர் இருக்கை அருகே  நடத்துனர்கள் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டு பணி செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது.

அவ்வாறு செய்வதால் பேருந்து ஓட்டுனருக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் பேருந்து சிக்னலிலும், குறைந்த வேகத்திலும் செல்லும்போது நடத்துனர் பேருந்தில் பணி ஓட்டுனரிடம் பேசிக் கொண்டு  செல்வதால், பயணிகள் யாராவது பேருந்தினுள் ஏறினாலோ, இறங்கினாலோ கவனிக்க இயலாது


. எனவே, பேருந்தின் நடத்துனர்கள் அனைவரும் பேருந்து இயக்கத்தின்போது ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து பேசிக் கொண்டு செல்வதை  தவிர்க்க வேண்டும். மேலும் பேருந்து காலியாக இருக்கும்போது, நடத்துனர் இருக்கை அருகே இருந்து கொண்டு பணி செய்திடவும், பேருந்து இயக்கத்தில் இயக்கும் போது ஓட்டுனரிடம் பேசிக்கொண்டு பணி செய்யக்கூடாது.



மேலே குறிப்பிட்டுள்ள ஒழுங்கீன செயலை செய்யும் பணியாளர்களை கண்காணித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கிடவும், தொடர்ந்து அதே செயலில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், சம்பந்தப்பட்ட கிளை  மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் வருவாய் பிரிவு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

No comments:

Post a Comment