டியூஷன் கட்டணம் 1 ரூபாய்; கல்வி கற்பிக்கும் பெண் அதிகாரி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 7, 2019

டியூஷன் கட்டணம் 1 ரூபாய்; கல்வி கற்பிக்கும் பெண் அதிகாரி

திருச்சியில், மாதம், 1 ரூபாய் கட்டணம் பெற்று, பள்ளி மாணவர்களுக்கு, டியூஷன் நடத்தி வரும், பெண் அலுவலருக்கு, பாராட்டுகள் குவிந்து வருகிறது.திருச்சி, அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், கோமதி, 47. திருமணமாகாத இவர், ஈ.வெ.ரா., கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பியதும், ஒரு தொண்டு நிறுவனத்தினர் நடத்தும், டியூஷன் சென்டரில், ஆசிரியராக பணியாற்றுகிறார். அரசு பள்ளிகளில் படித்து வரும், ஏழை, எளிய மாணவர்களுக்கு, 1 ரூபாய் கட்டணத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பதை, சேவையாக செய்து வருகிறார்.


 பிளஸ் 2 வரை படிக்கும், 60க்கும் மேற்பட்ட, மாணவ மாணவியர், இவரிடம் படிக்கின்றனர்.இது குறித்து, கோமதி கூறியதாவது: திருச்சியில், டி.எம்.எஸ்.எஸ்., என்ற தொண்டு நிறுவனத்தினர், 2003ம் ஆண்டு முதல், ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் நடத்தும் பணியை துவக்கினஆசிரியர் பணி செய்ய வேண்டும்' என, சிறு வயதிலிருந்து ஆசைப்பட்டதால், தொண்டு நிறுவனத்தில், டியூஷன் எடுக்கும் பணியை, மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இலவசமாக நடத்தினால், மதிப்பு இருக்காது என்பதால், 1 ரூபாய் கட்டணம் பெற்று, 16 ஆண்டுகளாக, மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறேன். தொண்டு நிறுவனத்தின் சார்பில், ஊக்கத் தொகை வழங்காவிட்டாலும், தொடர்ந்து, டியூஷன் நடத்தி வருகிறேன். நானும், தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்த காரணத்தால், அவர்களின் கஷ்டம், எனக்கு தெரியும்.

மாணவர்களுக்கு பாடம் நடத்த, வசதியான இடம் கிடைக்காததால், தெரு விளக்கு வெளிச்சத்தில், மாலை, 6:30 மணி முதல், ஒரு பிரிவாகவும்; 7:30 மணி முதல், 9:00 மணி வரை மற்றொரு பிரிவாகவும் பிரித்து, பாடம் நடத்துகிறேன். சரியான இடம் இல்லாததால், மழைக் காலத்தில் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. அரசு தரப்பிலோ, சேவை மனப்பான்மை உள்ளவர்களோ, போதுமான இட வசதி செய்து கொடுத்தால், இந்தப் பணியை, இன்னும் சிறப்பாக செய்ய முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment