பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, வரும், 11ம் தேதிக்குள் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 4, 2019

பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, வரும், 11ம் தேதிக்குள் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை உத்தரவு

பிளஸ் 2 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை, வரும், 11ம் தேதிக்குள் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு, பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை, தேர்வுத் துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், அனைத்து மாவட்ட அரசு மற்றும் தனியார் மேல்நிலை பள்ளிகளுக்கும், அரசு தேர்வுத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை


:நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுதும் வகையில், அவர்களின் விபரங்களை, பள்ளிகள் சேகரித்து, 11ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்ப வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், இந்த விபரங்களை சரிபார்த்து, அரசு தேர்வுத் துறை அலுவலகத்துக்கு, 13ம் தேதிக்குள், அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டில், பிளஸ் 1 படித்த அனைத்து மாணவர்களின் விபரங்களும், பிளஸ் 2 தேர்வுக்கான பட்டியலில், இடம் பெற வேண்டும். எந்த மாணவரின் பெயரும் விடுபடக் கூடாது. அவர்கள் வேறு பள்ளிக்கு மாறியிருந்தாலும், அவர்களின் விபரங்களை, புதிய பள்ளிகளில், இணைத்து வழங்க வேண்டும் என, அரசு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment