ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள 1,500 ஆசிரியர்களுக்கு ஒரு வார கால சிறப்பு பயிற்சி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 9, 2019

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள 1,500 ஆசிரியர்களுக்கு ஒரு வார கால சிறப்பு பயிற்சி

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தனி சட்டம் கொண்டு வர முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்ற கோபியில் நிருபர்களிடம் கூறியதாவது:

 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள 1,500 ஆசிரியர்களுக்கு ஒரு வார கால சிறப்பு பயிற்சி அளித்து அவர்கள் தேர்ச்சி பெறும் வரை மீண்டும் மீண்டும் தேர்வு வைக்கப்படும்.

அங்கன்வாடி பணியாளர், ஆங்கில வழி  கல்விக்கு ஆசிரியராக நியமிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். 14,000 ஆசிரியர்கள் ஏற்கெனவே கூடுதலாக உள்ள நிலையில், இது குறித்து சமூக நலத்துறையுடன் இணைந்து முதலமைச்சருடன் கலந்து ஆலோசனை செய்யப்படும்.

 மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தனி சட்டம் கொண்டு வர முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:

Post a Comment