2012ல் 210; 2019ல் 610 மாணவர்கள்: சாதித்த நலலாசிரியை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 8, 2019

2012ல் 210; 2019ல் 610 மாணவர்கள்: சாதித்த நலலாசிரியை

மாணவர்கள்ஒரு நல்ல ஆசான் நினைத்தால் களிமண்ணையும் உயிரூட்டமுள்ள அழகிய பொக்கிஷமாக வடிக்க முடியும். இவர்களை கவுரவிக்கும் விதமாக, தமிழக அளவில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை ஆண்டுதோறும் வழங்குகிறது.


இந்தாண்டு, திருப்பூரில் இருந்து விருது வாங்கியவர்களில், பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா,முக்கியமானவர். கடந்த மூன்று ஆண்டுகளில் இவர் செய்த சாதனை மகத்தானது.அதை அவரிடமே கேட்போம்...கடந்த, 1997ல் பெருமாநல்லுார் அருகே தொரவலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதன்முறையாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்.


பின், 2005ல் பதவி உயர்வு பெற்று கே.புதுப்பாளையம் தலைமை ஆசிரியர் பணியை தொடர்ந்தேன்அதன்பிறகு, 2012ல் பூலுவப்பட்டிக்கு வந்தேன். நான் சேர்ந்தபோது வெறும், 210 மாணவர் மட்டுமே இருந்தனர்.மேலும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் பின்தங்கி இருந்தது. ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் உதவியோடு, பல வசதிகள் மேம்படுத்தினேன்.


குறிப்பாக, ஐந்து வகுப்புக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, ஒரு லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் வேலி, 15 கம்ப்யூட்டர்களுடன் கணினி ஆசிரியர், 7 லட்சம் மதிப்பீட்டில் 6 வகுப்பறைகள் கிரானைட் தரை, ஒன்றாம் வகுப்புக்கு 100 மழலையர் நாற்காலி, 95 ஆயிரம் மதிப்பில் 20 மழலையர் மேஜைகள் மற்றும் பென்ச்சுகள் என, பல்வேறு வசதிகளை கொண்டு வந்தோம்.


தொடர்ந்து, விளையாட்டுக்கென, 5 வண்ண சீருடை, பள்ளி சார்பில் வருடாந்திர காலண்டர் வெளியிடுதல், குழந்தைகளுக்கு தினசரி டைரி, பெல்ட், ஐ.டி., கார்டு வசதி, சிலம்பம், பறை, கராத்தே, பரதம் சிறப்பு வகுப்புகள் மூலம் தனியார் பள்ளியை விட தரத்தினை உயர்த்தினோம்.

இதற்காக, சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருது, 2017ல் கிடைத்தது.பின் வீடு வீடாக சென்று, இதனை 'கேன்வாஸ்' செய்தேன். இதனால் 2017 வரை 230க்குள் இருந்த மாணவர் எண்ணிக்கை, நடப்பாண்டு, 610 ஆக உயர்ந்துள்ளது. தவிர, அனைத்து வகுப்பறைக்கும் ஸ்பீக்கர் வசதி ஏற்படுத்தினேன்.


இதன்மூலம் மதிய உணவு வேளை முடிந்ததும், 1:00 முதல், 1:30 மணி வரை, அனைத்து மாணவருக்கும் கதை, திருக்குறள், வாய்ப்பாடு கேட்க வைப்போம். மாணவர்கள் குஷியோடு கற்பர்.


இதுபோன்ற பல செயல்களால் இவ்விருது கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் பள்ளியின் தோற்ற அமைப்பை ஓவியங்களால் பொலிவுறச்செய்ய திட்டமிட்டுள்ளேன். சக ஆசிரியர்கள், மாணவருக்கும் இவ்விருதினை சமர்ப்பிக்கிறேன்

No comments:

Post a Comment