குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 1, 2019

குரூப் 4 தேர்வு: 13.5 லட்சம் பேர் எழுதினர்; வினாக்கள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப் 4 எழுத்துத் தேர்வை 13.52 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.

பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள்
குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.


கடந்த காலங்களில் நடந்த தேர்வுகளில் மிகவும் சிக்கலான முறையில் யோசித்து பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்வில் அனைத்து கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், நேரடியாக பதில் அளிக்கக் கூடிய வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் தேர்வர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக கணிதத்தில் கேள்விகள் மிகவும் எளிமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். புதிய பாடத் திட்டத்தின் கீழ் அதிகமாகப் படித்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தேர்வர்கள் கூறினர்.

No comments:

Post a Comment