வங்கியில் கடன் வாங்க போறீங்களா? இன்னும் ஒரு 4 நாள் தள்ளி போடுங்க - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 29, 2019

வங்கியில் கடன் வாங்க போறீங்களா? இன்னும் ஒரு 4 நாள் தள்ளி போடுங்க

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரிசர்வ் வங்கியின் கூட்டம் நடந்தது. அதன்படி, ரிசர்வ் வங்கியின் அடுத்த கூட்டம் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. அக்டோபர் 4ம் தேதி ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை 0.25 சதவீதம் குறைக்கும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

ரிசர்வ் வங்கி முக்கிய கடன்களுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் போது பணவீக்கத்தை கருத்தில் கொண்டே முடிவு செய்யும்

அதன்படி பார்த்தால் தற்போது நாட்டில் பணவீக்கம் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவை காட்டிலும் குறைவாகவே உள்ளது. மேலும், பொருளாதார வளர்ச்சி நிலவரம் மிகவும் மோசமாக உள்ளது. இது போன்ற காரணங்களால் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என பலர் அடித்து கூறுகின்றனர்.

அதேசமயம், நிதிப் பற்றாக்குறை, பெட்ரோலிய கச்சா எண்ணெய் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் என்ன அச்சப்பாடு உள்ளதால் வட்டியை குறைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், அண்மையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் அளித்த பேட்டி ஒன்றில், வட்டியை குறைக்க மேலும் வாய்ப்புகள் உள்ளது. மேலும் வளர்ச்சிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும் என கூறியிருந்தார். அதனால் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டியை குறைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது பெரும்பான்மையான வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை ரெப்போ ரேட்டுடன் இணைத்து விட்டன. அதனால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைத்தால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்புள்ளது. அதனால இன்னும் 4 நாள் கழித்து ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்கா இல்லையான்னு பார்த்துட்டு கடன் வாங்கலாம் என்ற யோசனையில் பலர் உள்ளனர்.

No comments:

Post a Comment