குரூப் 4 தேர்வில் மாற்றுத்திறனாளிக்காக தேர்வெழுதிய கரூர் கலெக்டர் மனைவி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 2, 2019

குரூப் 4 தேர்வில் மாற்றுத்திறனாளிக்காக தேர்வெழுதிய கரூர் கலெக்டர் மனைவி

குரூப் 4 தேர்வில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு, தேர்வெழுதிய கரூர் கலெக்டரின் மனைவிக்கு பாராட்டு குவிகிறது.கரூர் மாவட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, 80 மையங்களில் நேற்று நடந்தது. பார்வையற்ற மற்றும் எழுத இயலாதவர்களுக்கு, தேர்வெழுத 'ஸ்கிரைபர்கள்' உதவினர்.


 இதில் கரூர், தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில், லதா என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி பங்கேற்றார். அவருக்கு, கரூர் கலெக்டர் அன்பழகனின் மனைவி பூமா 'ஸ்கிரைபராக' தேர்வெழுதினார்.இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் கூறியாதாவது:


பார்வையற்ற மற்றும் கைகளால், தேர்வெழுத முடியாதவர்களுக்கு உதவ, விண்ணப்பிக்க வேண்டும்.அதில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேர்வு நாளன்று காலை, கணினியில் தேர்வு செய்யப்படுவர். அவர்கள், அந்த தேர்வு மையங்களுக்கு சென்று, தேர்வு எழுத உதவி செய்வர்.


இதன்படி, கரூர் கலெக்டரின் மனைவி பூமா, தேர்வெழுதினார். இவ்வாறு அவர் கூறினார். ஸ்கிரைபராக தேர்வெழுதிய, கலெக்டரின் மனைவிக்கு, பாராட்டு குவிந்து வருகிறது.

No comments:

Post a Comment