தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதை ஏற்க முடியாது: முதலமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதை ஏற்க முடியாது: முதலமைச்சர்

தமிழகத்தில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைப்பதை ஏற்க முடியாது என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து இந்தியை திணிக்க முயற்சித்து வருவதாக குற்றஞ்சாட்டினார். புதுச்சேரியில் தடையை மீறி பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த விடாமல் துணை நிலை ஆளுநர் தடையாக உள்ளதாகவும் கூறினார். 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வைத்தால் மன உளைச்சலுக்கு ஆளாவார்கள் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேவையா?என்பது பற்றி கல்வி அமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்

No comments:

Post a Comment