5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 16, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

மாணவர்களை இடைநிற்கச் செய்யும் வகையில், 5, 8-ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வை அமல்படுத்தக் கூடாது என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.



திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் மா. நம்பிராஜ் தலைமை வகித்தார்.


 பொதுச்செயலர் அ. வின்சென்ட் பால்ராஜ் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்தியச் செயலர் வா. அண்ணாமலை பேசியது:
குழந்தைகளின் மனநிலையையும், மூளை வளர்ச்சியையும் கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை வரைவைத் தயாரித்துள்ளது

மாணவர்களை அதிகளவில் இடைநிற்கச் செய்யும் வகையில், பொதுத் தேர்வுகள் நடத்த புதிய கல்விக் கொள்கையில் வரைவுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்காரணமாக மாணவர்களின் மனநிலை கடுமையாக பாதிப்புக்குள்ளாகும். தேர்ச்சி பெறாவிட்டால் மிகுந்த பாதிப்பை பால்ய வயதில் எதிர்கொள்ள வேண்டும். 10 வயது குழந்தைக்கு பொதுத் தேர்வு என்பது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து செயல்படுத்த வேண்டும் என்றார்

.
இக் கூட்டத்தில், மாநிலப் பொருளாளர் க. சந்திரசேகர், துணைப் பொதுச் செயலர் அ. முனியாண்டி, மாநில துணைத் தலைவர்கள் அ. எழிலரசன், பா. கனகராஜ், மாநிலத் துணைச் செயலர் ஆ.ராஜசேகர், மாநில அமைப்புச் செயலர் இரா. ராஜசேகரன் ஆகியோர் சங்க எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019-ஐ உடனடியாக திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கையானது 3- ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வியை வலியுறுத்துகிறது.


தமிழகத்தில் 1952-இல் இருந்ததைப் போன்று குலக் கல்வித் திட்டத்துக்கு வழிவகை செய்கிறது. சமூக நீதியை, ஏழை, எளிய மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தகர்த்தெறியும் நோக்கத்துடன் கொண்டுவரப்படும் கல்விக் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

No comments:

Post a Comment