8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

8ம் வகுப்புக்கு அறிவியல் செய்முறை தேர்வு

எட்டாம் வகுப்புக்கு பொது தேர்வு அறிவிக்கப் பட்டதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி கல்வியின் தரத்தை உயர்த்த, பள்ளிக் கல்வி அமைச்சர், செங்கோட்டையன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

 இதன்படி, பிளஸ் 1ல், பொதுத் தேர்வு அமலுக்கு வந்தது. ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இதையொட்டி, எட்டாம் வகுப்புக்கான கற்பித்தல் முறைகளில் மாற்றம் செய்வதற்காக, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 25 மதிப்பெண்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நடத்துவது போல், எட்டாம் வகுப்புக்கும் நடத்தலாம் என, ஆலோசனை நடத்தப்படுகிறது. அதனால், எட்டாம் வகுப்பு மாணவர்கள், அறிவியல் ஆய்வகங்களை பயன்படுத்தஅனுமதி அளிக்கப்படும்.

பள்ளிகளில் சிறப்பு செய்முறை தேர்வு பயிற்சியும் அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment