ATM இல்லாத ஊரிலும் ஆதார் மூலம் பணம் பெறலாம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 4, 2019

ATM இல்லாத ஊரிலும் ஆதார் மூலம் பணம் பெறலாம்

தபால் துறையில் 'இந்தியா போஸ்டல் பேமென்ட் வங்கி' (ஐ.பி.பி.பி.,) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆதார் கார்டு மூலம் பணம் பெறும் வசதி ஏ.டி.எம்., கார்டுகளுக்கு விடுமுறை அளிக்கும்' என்கின்றனர் தபால்துறை அதிகாரிகள்.


வங்கியில் நாள் முழுவதும் கால்கடுக்க நின்று பணம் செலுத்தி, பெற்று வந்த நிலையில் தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏ.டி.எம்.,) பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் வங்கிக்கு செல்லாமலேயே பணம் செலுத்த, எடுக்க முடிகிறது.இந்நிலையில் மாதம் ஐந்துமுறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கிகள் ரூ.30 முதல் 50 வரை சேவை கட்டணம் வசூலிக்கிறது.


எனவே, ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்துவோர் தங்களது பரிவர்த்தனைகளை குறைத்துள்ளனர்ஏ.டி.எம்., இல்லாத இடங்களில் பணம் எடுக்க நீண்ட துாரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதற்கு தீர்வாக தபால்துறையின் இந்தியா போஸ்டல் பேமென்ட் வங்கி (ஐ.பி.பி.பி.) மூலம் ஆதார் சார்ந்த பரிவர்த்தனை தொடங்கப்பட்டுள்ளது.தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்த வசதி நேற்று முதல் துவங்கியுள்ளது.

வருங்காலத்தில் ஏ.டி.எம்., சேவையும், ஆதார் கார்டில் வருவதற்கான முதற்படி இது.'ஐ.பி.பி.பி.,' வங்கி சேவை வசதி உள்ள தபால் நிலைய வங்கி முகவர்கள் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட எந்த ஒரு வங்கி கணக்கிலும் இருந்து பணம் செலுத்துதல்,பணம் பெறுதல், நிதி பரிமாற்றம், இருப்பை அறிந்து கொள்ளலாம்.


இச்சேவை பயோமெட்ரிக் தகவல் உறுதி செய்யப்பட்ட பின்னரே செயல்படுத்தப்படும். ஐ.பி.பி.பி., கணக்கு இல்லாத பட்சத்திலும் ஆதார் கார்டு மூலம் இந்த பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும். கட்டணம் கிடையாது, என்றார்.

No comments:

Post a Comment