தொழில்திறன் சார்ந்த பயிற்சி வழங்குவது குறித்து பரிசீலனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 7, 2019

தொழில்திறன் சார்ந்த பயிற்சி வழங்குவது குறித்து பரிசீலனை

பின்லாந்து நாட்டை போல் 9ம் வகுப்பில் இருந்து தொழில்திறன் சார்ந்த பயிற்சி வழங்குவது குறித்து  பரீசிலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வசதியாக முதுநிலை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி முகாம், ஈரோடு திண்டலில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில்  துவங்கியது.

பயிற்சி முகாமை துவக்கி வைத்து  பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:


ஈரோடு மாவட்டத்திற்கு 10 முதுகலை ஆசிரியர்கள் வீதம் 320 முதுநிலை ஆசிரியர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், வல்லுநர்களை கொண்டு நீட், ஜேஇஇ, மற்றும் திறனறி தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.

 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் கணினி வசதியுடன் கூடிய உயர்தர ஆய்வகங்கள் நிறுவப்பட்டு வருகிறது.  வகுப்பறைகளில் கரும்பலகை அகற்றப்பட்டு விரைவில் ஸ்மார்ட் போர்டுகள் பொருத்தப்பட உள்ளது.

இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் கூறுகையில்,  ‘பின்லாந்து நாட்டில் தொழில்சார்ந்த கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டு வயதிலேயே மாணவர்களை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், 6 வயது ஆன பின்புதான் கல்வி கற்றுத் தருகின்றனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல நெறிமுறைகளை கற்றுத் தருகின்றனர்.பள்ளிக்கு குழந்தைகள் விருப்பத்தோடு வரும் சூழல் அங்கு உள்ளது. அங்கு அரசே பள்ளிகளை முழுமையாக நடத்துகிறது. 9ம் வகுப்பு படிக்கும்போது தொழில் திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. அதற்கான வசதி பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பின்லாந்து நாட்டை போல் 9ம் வகுப்பில் இருந்து தொழில்திறன் சார்ந்த பயிற்சி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

No comments:

Post a Comment