ஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

ஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க!

தென்னகத்தின் காஷ்மீர் என்று பெருமைக்குரிய சுற்றுலா தளமாக இருக்கிறது மூணாறு. சுற்றிலும் அழகிய மலைகள், தேயிலை தோட்டங்களின் நடுவில் வெள்ளியை உருக்கி ஊற்றிக் கொண்டிருப்பதைப் போல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டெருமைகள், காட்டு யானைகள் என வனமும், வனப்பும் சூழ்ந்த ரம்யமான பகுதியை கண்டு களிக்க புத்துணர்ச்சி பெறுவதற்காக இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் மூணாறு வந்து செல்கின்றனர்.


அப்படி சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பின் தங்கும் விடுதிகளை தேடிய அலைந்த காலம் போய், தற்போது ஆன்லைனில் விடுதிகளைப் பார்த்து, விலையை விசாரித்து புக் செய்துவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தான் அதிகம்.



மூணாறு அருகே குறைந்த விலையில், சொகுசான தங்கும் விடுதிகள் என ஆன்லைனில் பதிவிட்டுள்ளதைப் பார்த்து, அதன் உண்மை தன்மையை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் அறைகளைப் பதிவு செய்து விடுகின்றனர். அப்படி அறையை முன்பதிவு செய்துவிட்டு, மூணாறு வருபவர்கள், விழி பிதுங்கி நிற்கிறார்கள்


மூணாறுக்கும், தாங்கள் பதிவு செய்துள்ள விடுதிக்கும் சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பது அவர்களை பேரதிர்ச்சிக்கு ஆளக்குகிறது.


அழகிய மலைகளையும், இயற்கை எழிலையையும் கண்டுகளிக்க நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மூணாறுக்கு கொஞ்சமும் சம்பந்த்மேயில்லாத ஏதோ ஒரு இடத்தில் அறை எடுத்து தங்கும் அவஸ்தை அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதுடன் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது!


இப்படி சுற்றுலா பயணிகளை வலை விரித்து வலைத்தளங்களில் ஏமாற்றும் சொகுசு விடுதிகள், அழகழகான மூணாறின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்டு ஏமாற்றுகின்றன. இந்தப் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்து விட்டு, அந்த விடுதிகளிலேயே தங்குவதற்கு முன்பதிவு செய்து விடுகின்றனர்.


இதில், வருத்தம் என்னவென்றால் தங்கியிருக்கும் இடமே மூணாறு என நம்பி, ஒரிஜினல் மூணாறை பார்க்காமலேயே பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் சென்ற கதையும் உண்டு.


மூணாறு பகுதிக்கு உட்படாத குறிப்பிட்ட பகுதியின் பெயர்களை சிறிய எழுத்திலும், மூணாறை பெரிய எழுத்திலும் பொறித்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் கடைகள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment