தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

தற்காலிக ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டுகள் பணிநீட்டிப்பு

தமிழகத்தில் ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 2011-12-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப்பள்ளிகளுக்கு தலா ஒரு தலைமையாசிரியர் மற்றும் 9 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வீதம் 1,000 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்தப் பணியிடங்களுக்கு கடைசியாக 2018-ஆம் ஆண்டு டிசம்பர் வரை தொடர்பு நீட்டிப்பு ஆணை வழங்கப்பட்டிருந்தது

இந்த கால அவகாசம் முடிந்துவிட்டதை அடுத்து பணிநீட்டிப்பு காலம் 2021-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்

No comments:

Post a Comment