மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி பலமடங்கு உயர்த்திய அபராதத் தொகை குறைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 10, 2019

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி பலமடங்கு உயர்த்திய அபராதத் தொகை குறைப்பு

மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைத்து குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன  திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.


 இதன்படி ஹெல்மெட் அணியாமல்  செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்  ஆகியோருக்கான அபராத தொகை ரூ.100ல் இருந்து 1,000மாக உயர்ந்துள்ளது.


அதேபோல  மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000ல் இருந்து 10  ஆயிரமாக வசூலிக்கப்படுகிறதுஇதுபோல பல விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு முன்பை விட 10 மடங்கு அபராதம் விதிக்கப்படுகிறது.


இந்த நடவடிக்கைக்கு பல  தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து மேற்கு  வங்காளம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 6 மாநிலங்கள், மத்திய அரசின்  இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன.


ஆனால் குஜராத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பது அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொது  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குஜராத் அரசு குறைத்துள்ளது.

அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றால் விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1000-ல் இருந்து ரூ.500 ஆக குஜராத் அரசு குறைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம் இன்றி பயணம் செய்தால் ரூ.5,000-ஆக இருந்த அபராதம் ரூ.3,000-ஆக குறைப்பு. மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்றால் விதிக்கப்படும் அபராதம் ஆயிரத்தில் இருந்து ரூ.100-ஆக குறைப்பு. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் விதிக்கப்படும் அபராதமும் ரூ. 500-ஆக குறைக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment