மாணவர்களின் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறை புதிய வழி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, September 3, 2019

மாணவர்களின் வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க பள்ளிக் கல்வித் துறை புதிய வழி

பள்ளி மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாட்டை தவிர்ப்பதற்காக சூரிய வெளிச்சத்தில் விளையாட வைக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓய்வு நேரங்கள், இடைவேளைகளில் மாணவர்களை வெயிலில் விளையாடச் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து வித பள்ளிகளிலும் சூரிய வெளிச்சத்தின் நன்மைகள் குறித்து காலையில் நடைபெறும் இறை வணக்கக் கூட்டங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளதுபல மாணவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சோர்வு உள்ளிட்டவை ஏற்படுகின்றன. இதனால், இந்த அறிவுரையை பள்ளிக் கல்வி இயக்ககம் முன்னெடுத்துள்ளது

No comments:

Post a Comment