மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய வசதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 15, 2019

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிய வசதி

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மைகளை தேனி தேர்வு துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என துணை இயக்குனர் மணிமாலா தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மத்திய, மாநில அரசு துறைகள், நிறுவனங்களில் பணிபுரிவோர், பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் எட்டாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்,மேல்நிலை, ஆசிரிய கல்வி பட்டய தேர்வு ஆகியவற்றிற்கான மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மை அறிய , தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.மத்திய, மாநில அரசு பணியாளர்களுக்கு உண்மை தன்மை அறிவதற்கான கட்டணம் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
தனியார் நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் கணக்கு தலைப்புகளில் சரிபார்ப்பு கட்டணமாக ரூ.50 ஐ கருவூல செலுத்து சீட்டு மூலம் செலுத்தலாம்.


இதில் கல்வி, போட்டி, விளையாட்டுகள், கலை பண்பாடு, பொதுக்கல்வி, இடைநிலைக்கல்வி, அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் நடத்தப்படும் தேர்வுகள், வரி அல்லாத கட்டணங்கள் சான்றிதழ்கள், பதிவேடுகள் கட்டணங்கள் ஆகியவற்றின் உண்மை தன்மை அறிந்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு தேனி, அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என ,உதவி இயக்குனர் மணிமாலா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment