வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 1, 2019

வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31- ஆம் தேதியே கடைசி நாள் என்றும், தேதி நீட்டிக்கப்படாது என்று மத்திய நிதித்துறை அமைச்சகம், ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

இதன் காரணமாக  (31/0/2019) ஒரே நாளில் மட்டும் ஆன்லைன் மூலம் சுமார் 49 லட்சத்து 29 ஆயிரம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் வருமான வரி செலுத்தும் முறையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.



அதாவது  (31/08/2019) மட்டும் ஆன்லைன் மூலமாக வினாடிக்கு சராசரியாக 196 பேரும், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 7447 பேரும், ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 3.87 லட்சம் பேரும், மொத்தம் 49.29 லட்சம் பேர் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

 இருப்பினும் ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் தங்களது வருமான வரி கணக்கை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்த போதும் வருமான வரித்துறையின் இணையதளம் "ஹாங்" ஆகாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment