அறிவியல் கண்காட்சியை அக்டோபர் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 9, 2019

அறிவியல் கண்காட்சியை அக்டோபர் மாதம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு 47வது ஜவகர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை அக்டோபர் மாதம் நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை  உத்தரவிட்டுள்ளது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழக அரசின் பள்ளிக் கல்வி இயக்ககம், சமக்ரசிக்‌ஷா இயக்கம் ஆகியவை இணைந்து 47வது ஜவகர்லால் நேரு மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை நடத்த உள்ளன. இதன்படி  பள்ளி  மாணவர்களின் அறிவியல்  ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சியை மாநிலம் முழுவதும் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.


இந்த கண்காட்சி பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும், வருவாய்  மாவட்ட அளவிலும் நடத்தி அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களை கொண்டு இறுதியாக மாநில அளவில் அறிவியல் கண்காட்சி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி  அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கண்காட்சி, ‘நீடித்த, நிலையான வளர்ச்சிக்கு அறிவியல் ம ற்றும் தொழில் நுட்பம்’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு மாணவர்கள் தாங்களே சில படைப்புகளை தயாரித்து நடத்த  வேண்டும்.

இது குறித்த விவரங்களை புதுடெல்லியில் உள்ள தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில் அறிவியல் பெருவிழாக்கள் என்ற பெயரில் அறிவியல் கண்காட்சி, கணிதக் கருத்தரங்கம்,  நடத்தப்படுகிறது.


கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா சமிதி, அணுசக்தித்துறை பள்ளிகள், மத்திய திபெத்திய நிர்வாகப் பள்ளிகள், சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பொதுப் பள்ளிகள், மண்டல கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில்  6ம்  வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர் இவற்றில் பங்கேற்கின்றனர்.


மாநில அளவில் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்கும் மாணவர்கள் தங்கள் படைப்புகளின் கட்டுரைகளை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த  அறிவியல் கண்காட்சியை முன்னிட்டு பள்ளிகள் அளவில் அக்டோபர் 5ம் தேதிக்குள்ளும், கல்வி மாவட்ட அளவில் அக்டோபர் 10ம் தேதிக்குள்ளும், வருவாய் மாவட்ட அளவில் அக்டோபர் 14, 15ம் தேதிகளிலும் கண்காட்சிகளை நடத்த  வேண்டும்.


அத்துடன், அக்டோபர் 15ம் தேதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாளை, இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்


Click here to download science exhibition proceedings

No comments:

Post a Comment