பள்ளிகளில் இரண்டாவது மொழி பாடமாகும் தமிழ்! தமிழ் மொழிக்கு கிடைத்த கௌரவம்!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 18, 2019

பள்ளிகளில் இரண்டாவது மொழி பாடமாகும் தமிழ்! தமிழ் மொழிக்கு கிடைத்த கௌரவம்!!

இந்தியாவின் அனைவரும் இந்தி கற்கவேண்டும், அப்போது தான் நம் நாட்டை முன்னேற்ற முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்


இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடமாக தமிழ் மொழியை தேர்வு செய்யப்பட்டுள்ளதுஇது தமிழ் மொழியை கௌரவம் படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது


நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பாடமாக கற்றுத்தரப்படும் தெரிவித்துள்ளனர்.

 மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment