உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வினோத உறுதி மொழி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 4, 2019

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வினோத உறுதி மொழி

தங்கள் மக்களின், அடையாளம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க, வெளி மாநிலத்தவர்களை திருமணம் செய்ய மாட்டோம் என, மிசோரம்மாநில உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், உறுதி மொழி ஏற்றனர். மிசோரத்தில், முதல்வர் ஸோரம் தங்கா தலைமையில், மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது


.இம்மாநிலத்திற்கு, சட்டப்பிரிவு, 371ன் கீழ், சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநில அரசின் அனுமதி இன்றி, மதம் மற்றும் கலாசார பழக்கவழக்கங்கள், நில உரிமை உட்பட பல்வேறு சட்டங்களில், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.


மேலும், வெளி மாநிலத்தவர்கள், மிசோரமிற்குள் நுழைய, ஐ.எல்.பி., எனப்படும், அனுமதிச் சீட்டை பெறுவது; வெளி மாநிலத்தவர்கள், மிசோரமில் நிலம் வாங்க முடியாதது போன்ற பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ளன.


 இந்நிலையில், மிசோரமை சேர்ந்தவர்கள் வெளி மாநிலத்தவர்களை திருமணம் செய்து கொள்வது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.இதையடுத்து, மிசோ சிர்லாய் பாவல் எனப்படும் மாணவர் அமைப்பின் மூலம், பள்ளி மாணவர்களுக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், நுாற்றுக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். 'மிசோரம் மக்களின் அடையாளத்தையும், கலாசாரத்தையும் பாதுகாப்போம். வெளி மாநிலத்தவர்களை திருமணம் செய்து கொள்ள மாட்டோம்' என, மாணவ - மாணவியர், உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment