இந்தியாவிற்கான பெயர்க்காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 18, 2019

இந்தியாவிற்கான பெயர்க்காரணம் தெரிந்தால் அசந்து போவீர்கள்!

ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று அறியப் படுகிற பெயர், தமிழகம் தவிர்த்து இந்தியாவின் எந்த மாநில மொழிகளிலும் புழக்கத்தில் இல்லை.


மாற்றாக இந்தியாவை, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சம்சுகிருதத்தின் பாரதம் என்ற சொல்லை தங்கள் மொழி இயல்புகளுக்கு ஏற்ப கொஞ்சமான மாற்றத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்தியாவின் அலுவல் மொழிகளாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிற கீழ்கண்ட 21 மொழிகளில் இந்தியா கீழ்க் கண்டவாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

1.அசாமிய மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 2.பெங்காலி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 3.போடோ மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 4.டோக்ரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 5.குஜராத் மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 6.ஹிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 7.கன்னட மொழியில் இந்தியாவை பாரதா என்றும், 8.காசுமீரி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 9.கொங்கணி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 10.மைதிலி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 11.மலையாள மொழியில் இந்தியாவை பாரதம் என்றும், 12.மொய்தி மொழியில் இந்தியாவை பாரோத் என்றும், 13.மராத்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 14.நேபாளி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 15.ஒரிய மொழியில் இந்தியாவை பாரதோ என்றும், 16.பாஞ்சாபி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 17.சமசுகிருத மொழியில் இந்தியாவை பாரதம் என்றும், 18.சந்தாளி மொழியில் இந்தியாவை பாரதோ என்றும், 19.சிந்தி மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 20.தெலுங்கு மொழியில் இந்தியாவை பாரததேசமு என்றும், 21.உருது மொழியில் இந்தியாவை பாரத் என்றும், 22.தமிழ் மொழியில் மட்டும் இந்தியா இந்தியாவென்று அழைக்கப் படுகிறது. வடவர்கள் இந்தியா என்ற சொல்லை விரும்ப மாட்டார்கள்.


இந்தியாவை, ஹிந்தியில் குறிப்பிடும் போது (ரூபாய் நோட்டில்) பாரதிய ரிசர்வ் பைங் என்றே இருக்கும். பாரதஸ்டேட் பைங் பாரதிய ஜனதா கட்சி என்பனவற்றை ஒப்பு நோக்குங்கள். காங்கிரஸ் கட்சியின் பெயர் கூட ஹிந்தியில் பாரதிய இராஷ்டிர காங்கிரஸ் என்றுதான் எழுதப் படுகிறது.

பா- என்ற சமஸ்கிருதச் சொல்லிற்கு, ஒளி என்று பொருளாம். இதனாலேயே உலக இருளை அகற்றும் ஆதவனை பாஸ்கரன் என்று குறிக்கிறதாம் வடமொழி. ஞாயிற்றுக்கு 'பாநு' என்ற பெயரும் வடமொழியில் உண்டாம். "ரத" என்ற சொல்லிற்கு 'முழ்கியிருத்தல்- திளைத்திருத்தல்' என்ற பொருளாம்.

எனவே "ஞானத்தில் திளைத்திருந்த பூமி" என்று பெயர் விளங்க, இந்தியாவில் ஆரியர் வசித்த பகுதிக்கு பாரதம் என்ற பெயர் பெற்றதாக வடஇந்தியர்கள் சொல்லி மகிழ்கின்றனர்.

ஆக, ஆங்கிலம் மற்றும் உலக மொழிகள் அனைத்திலும் இந்தியா என்று பெயர் விளங்க காரணம் என்ன? தமிழகம் மட்டும் இந்தியா என்று அழைப்பதால் இந்தியா என்பது தமிழ்ச் சொல்லா? அப்படியானால் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழர்களுக்குச் சொந்தமானதா?

ஆரியர் வருகை, மற்றும் வடமொழி கலப்பால்தான் இந்தியா, பாரதமாகி இந்தியாவில் இத்தனை மொழிகளும் தோன்றக் காரணமானதா? அதனால்தான் இந்தியாவின் அனைத்து மொழியினரும் இந்தியாவை பாரதம் என்றே அழைத்துக் கொள்கின்றனரா? ஆங்கிலேயர் மற்றும் உலகினர் யாருக்கும் இந்தியாவின் ஆரிய வரவுக்கு முந்தைய தமிழ்இந்தியாவோடுதான் தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டனவா? அனைத்தும் உண்மைதான்


1 comment:

  1. Ayyaa katturaiyaalarae, mozhippatru irukka vendiyadhuthaan, aanall adharkkaaga iooadiyellamaa poi solluveergal? Vittaa sun uruvaagarathukku munnaadiyae tamil mozhi uruvaaiducchnnu kooda solluveengalo?

    ReplyDelete