ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 2, 2019

ஆரம்ப சுகாதார நிலையங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை

தமிழக அரசு நடத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் மருந்தகங்களில் மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் என்ற பணிக்கு தற்காலிக ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணிகள்:
மருந்து விநியோகிப்பாளர் அல்லது மருந்து வழங்குபவர் (Dispenser)

மொத்த காலியிடங்கள் = 405

முக்கிய தேதிகள்:
அறிவிப்பாணை வெளியான தேதி: 31.08.2019
விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 31.8.2019
பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2019, மாலை 5.00 மணி வரை

வயது வரம்பு: (01.07.2019 அன்றுக்குள்)
குறைந்தபட்சமாக, 18 வயது நிரம்பியவராகவும் அதிகபட்சமாக 57 வயது பூர்த்தியடையாதவராகவும் இருத்தல் அவசியம்.ஊதியம்:
தினமும் 6 மணி நேரம் பணியாற்றுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.750 வீதம் (வாரத்தில் 6 நாட்கள்)
வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

டிப்ளமா இன் பார்மஸி (சித்தா / யுனானி / ஆயுர்வேதா / ஹோமியோபதி) அல்லது தமிழக அரசால்நடத்தப்படும் டிப்ளமா இன் இண்டகிரேடட் பார்மஸி என்ற படிப்பை பயின்றவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:



ஆன்லைனில், தமிழக சுகாதாரத்துறையின் http://www.tnhealth.org/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு20.09.2019 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் சென்று சேரும்படி அனுப்பி வைக்கவேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குநர்,
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துமனை வளாகம்,
அரும்பாக்கம்,
சென்னை - 600 016.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற,http://www.tnhealth.org/notifications.php(அல்லது)http://www.tnhealth.org/online_notification/notification/N1908211 6.pdf- என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

  1. Any 2years Diploma in practical nurse vaccines pls inform sir

    ReplyDelete