அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 18, 2019

அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை

அரசு உதவிபெறும் சிறுபான்மைப் பள்ளிகளில் புதிய ஆசிரியர் நியமனத்திற்கு தடை விதித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அனைத்து வகை சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளும், பணிநிரவல் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள வேண்டும்.

மாவட்டத்திற்குள் இருக்கும் உபரி ஆசிரியர்களை தேவைப்படும் பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில் வேறு மாவட்டங்களில் உள்ள உபரி ஆசிரியர்களைக் கொண்டு பணிநிரவல் செய்யுமாறு பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பணிநிரவல் செய்வதால் கூடுதல் நிதி இழப்பு தவிர்க்கப்படுவதுடன், பணிப் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment