தமிழக அஞ்சல்துறை சார்பில், பேமென்ட்ஸ் வங்கியில் ஆதார் வழி பண பரிவர்த்தனை முறை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்படவுள்ளது.
இது குறித்து அஞ்சல்துறை தமிழக வட்ட முதன்மைத் தலைவர் மு.சம்பத் கூறியது: இந்திய அஞ்சல்துறை பேமென்ட்ஸ் வங்கி, பிரதமரால் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது.
தற்போது, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இந்த வங்கி கடந்த ஒரு ஆண்டில் பல்வேறு தடைகளைத் தாண்டி பல சாதனைகளை புரிந்துள்ளது. இந்த வங்கியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை அனைவருக்கும் வங்கி சேவை கொண்டாடப்படுகிறது. இதுதவிர, தமிழக அஞ்சல் துறை சார்பில், பேமென்ட் வங்கியில் ஆதார் வழி பண பரிவர்த்தனை முறை செவ்வாய்க்கிழமை (செப்.3) தொடங்கி வைக்கப்படுகிறது.
ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவை மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் இணைக்கப்பட்ட எந்தவொரு வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்துதல், பணம் பெறுதல், நிதி பரிமாற்றம் மற்றும் பண இருப்பை அறிந்து கொள்ளுதல் போன்ற அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வங்கியின் வர்த்தக முகவர்கள் மூலமாக மேற்கொள்ள முடியும்.
ஆதார் சார்ந்த பண பரிவர்த்தனை சேவையில் ஆதார் எண் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை உறுதிசெய்வது மூலமாக, பயன்படுத்த எளிதாக இருக்கும். மேலும், இது பாதுகாப்பான தளமாக விளங்குகிறது. இதுதவிர, பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகின்றன என்றார் அவர்.

No comments:
Post a Comment