விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்ப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 7, 2019

விஐடி நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்ப்பு

2020- 21ம் கல்வியாண்டு முதல் விஐடி  நுழைவுத் தேர்வில் திறனாய்வு பிரிவு சேர்க்கப்பட்டு உள்ளது.வரும் 2020- 21ம் கல்வியாண்டு முதல்  விஐடி  நுழைவுத் தேர்வுகளில் ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ஆகியவற்றுடன் திறனாய்வு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.


தொழில் வல்லுனர்கள் மற்றும்  கல்வியாளர்களின்  பரிந்துரைப்படி இந்த பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உள்ள முன்னோடி பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மாணவர்களின்   திறனாய்வு திறனை பரிசோதிக்க இந்த பிரிவினை நுழைவுத் தேர்வுகளில் வைத்துள்ளன. இந்த நுழைவு  தேர்வில் கீழ்கண்டவாறு கேள்விகள் கேட்கப்படும்.


இயற்பியல் 35, வேதியியல் 35, கணிதம் அல்லது உயிரியல் 40, திறனாய்வு 10, ஆங்கிலம் 5. நுழைவுத் தேர்வின் கால அளவு இரண்டரை மணி நேரம். நுழைவுத்தேர்வில் நெகட்டிவ் மதிபெண்  கிடையாது. புதிய நுழைவுத் தேர்வுக்கான  மாதிரி வினாத்தாள் விரைவில் விஐடியின் www.vit.ac.in  இணையதளத்தில்  வெளியிடப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment