மாணவர்களும் மாணவிகளும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக செல்ல கூடாது ! மீறினால் அபராதம் ! பல்கலைக்கழகம் போட்ட கண்டிஷன் ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 29, 2019

மாணவர்களும் மாணவிகளும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக செல்ல கூடாது ! மீறினால் அபராதம் ! பல்கலைக்கழகம் போட்ட கண்டிஷன் !

பாகிஸ்தானில் உள்ள சார்சத்தா பகுதியில் பச்சாகான் எனும் பல்கலைக்கழகம் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இந்த பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ மாணவிகள் ஒன்றாக செல்ல கூடாது என்றும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக செல்வது இஸ்லாமியத்திற்கு எதிரானது எனவும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இது குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்க படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டு இருந்தது.

இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை பார்த்த பலரும் இதற்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.மேலும் இது குறித்து சிலர் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்

No comments:

Post a Comment