எஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்! வாடிக்கையாளர்களே உஷார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 16, 2019

எஸ்பிஐ -யில் வருகிறது மிகப் பெரிய மாற்றம்! வாடிக்கையாளர்களே உஷார்

state bank atm : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க டெபிட் கார்டுகளுக்குப் முற்றுப்புள்ளி வைக்கப்படவுள்ளது. டெபிட் கார்டுகளை பயன்பாட்டிலிருந்து நீக்க திட்டமிட்டிருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைவான அளவுக்கு மட்டுமே பிளாஸ்டிக் கார்டுகளை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

டெபிட் கார்டுக்கு மாற்றாக யோனோ (Yono) மொபைல் அப்ளிகேஷன் மற்றும் இணையதளம் மூலம் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய ஊக்குவிக்க எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.

அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் தளம்தான் யோனோ. ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் ஐபோன் போன்களுக்கு பிரத்யேகமாக எஸ்பிஐ யோனோ மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளனwww.sbiyono.sbi என்ற இணையதளமும் உள்ளது.

இவற்றின் மூலம் கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை எளிதாகப் பெறலாம். புதிய கணக்கு தொடங்குவதற்கு வசதி உள்ளது. பிற வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பவது போன்ற பொதுவான பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.

நிரந்தர வைப்பு நிதி, தொடர் வைப்பு நிதி கணக்குகளைத் தொடங்கி முதலீடு செய்யலாம். ரயில் டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன
ஏடிஎம் கார்டு இல்லாமலே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை இந்தியாவில் முதன் முறையாக ஸ்டேட் வங்கி நடைமுறைபடுத்தியுள்ளது.

இந்த வசதியை பெற யோனோ அப்ளிகேஷனில் உள்ள யோனோ பே (Yono Pay) பகுதிக்குச் சென்று யோனோ கேஷ் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். அதில் ஏடிஎம் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, 6 இலக்க யோனோ கேஷ் அடையாள எண்ணை உருவாக்க வேண்டும்.

No comments:

Post a Comment