ஜெஇஇ மெயின் தேர்வில் புதிய நடைமுறைகள் அமல்: தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் வீதம் குறையும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, September 7, 2019

ஜெஇஇ மெயின் தேர்வில் புதிய நடைமுறைகள் அமல்: தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் வீதம் குறையும்

அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கின்ற ஜெஇஇ மெயின் தேர்வில் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது


. நாடு முழுவதும் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலனஜி (ஐஐஐடி), இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.) மத்திய அரசின் உதவி பெறும் தொழிற்கல்வி நிறுவனங்கள் உட்பட தேசிய அளவில் தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் பொறியியல் மற்றும் அது சார்ந்த படிப்புகளுக்கு ஜெஇஇ மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்று இரண்டு நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகிறது


. பி.இ, பி.டெக், பி.ஆர்க், பி.பிளானிங் போன்ற படிப்புகளில் சேர இந்த நுழைவு தேர்வுகளில் வெற்றிபெறுவதுடன் சிறந்த தர மதிப்பெண் பெறுபவர்களுக்கே கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) வாயிலாக கணினி சார்ந்த ஜெஇஇ மெயின் தேர்வு நடத்தப்படுகிறது.

ஜனவரி மாதம் 6 முதல் 11ம் தேதி வரை நடக்கின்ற இந்த தேர்வுக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதன்முறையாக இந்தமுறை தேர்வு நடைமுறைகளில், கேள்விகளின் எண்ணிக்கையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது


. பி.இ, பி.டெக் பாடங்களுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு மல்டிபிள் சாய்ஸ் அடிப்படையில் கேள்விகள் தலா 20ம், எண்கள் விடைகளாக வருகின்ற கேள்விகள் 5ம் இடம்பெறும்.


 பி.ஆர்க் பாடத்திற்கு கணிதத்தில் மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் 20 மற்றும் எண்கள் விடைகளாக வருகின்ற கேள்விகள் 5ம் இடபெறும். டிராயிங் தொடர்பாக 2 கேள்விகள் இடம்பெறும். பி பிளானிங் பாடத்திற்கு டிராயிங் தேர்வு இல்லை. தேர்வுகள் அனைத்தும் மூன்று மணி நேரம் வீதம் நடைபெறும்.


 பி பிளானிங் பாடத்திற்கு மட்டும் மதியத்திற்கு பிறகு 2.30 மணிக்கு தேர்வு நடைபெறும். இதர தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளாக காலை 9.30 முதலும், மதியம் 2.30 முதலும் நடைபெறும். பி ஆர்க் பாடத்திற்கு டிராயிங் தவிர மற்ற தேர்வுகள் அனைத்தும் கணினி அடிப்படையில் நடைபெறும். தேர்வு மையம், தேர்வு தேதி, ஷிப்ட் ஆகியவை டிசம்பர் மாதம் 6ம் தேதி நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியின் இணையதளத்தில வெளியிடப்படும்.

ஒரு கேள்விக்கு பல விடைகள் கொடுக்கப்படுகின்ற மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளுக்கு சரியான விடைக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும். தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் வீதம் குறைக்கப்படும். எண்கள் விடையாக வருகின்ற கேள்விகளில் 4 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டாலும் தவறுக்கு மதிப்பெண் குறைக்கப்படாது.


 தேர்வு நடைமுறைகளில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் தொடர்பாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி இணையதளத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் 31ம் தேதி வெளியிடப்படும். இரண்டாம் கட்ட தேர்வு ஏப்ரல் 3 முதல் 9 வரை நடைபெறும். இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்பட உள்ளது


. 2018, 2019 ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 2020ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளவர்களும் மட்டுமே இந்த தேர்வுகள் எழுத தகுதியுள்ளவர்கள். மேலும் விபரங்களை www.nta.ac.in, www.jeemain.nta.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு தொடர்பான விபரங்கள், விண்ணப்ப கட்டணம், கட்டண சலுகைகள் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

* ஒரு கேள்விக்கு அளிக்கப்படும் சரியான விடைக்கு 4 மதிப்பெண் வழங்கப்படும்.
* தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும்.

No comments:

Post a Comment