இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிறுவன் நெகிழ்ச்சி கடிதம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 9, 2019

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிறுவன் நெகிழ்ச்சி கடிதம்

சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்க முடியாமல் போனதற்காக மனம் தளர்ந்து விட வேண்டாம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 10 வயது சிறுவன் ஒருவன், மனதை நெகிழ வைக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளான்.


விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்ததும், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் தகவல் பதிவிட்டு வருகின்றனர்.

 பல உணர்ச்சிகரமான பதிவுகள் இளைய தலைமுறைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் எந்த அளவிற்கு வழிகாட்டியாக உள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளன.இதில் 10 வயது சிறுவன் ஆஞ்சநேய கவுல், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது கைப்பட எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதத்தை அவரது தாய் ஜோதி கவுல் ஆன்லைனில் வெளியிட்டுள்ளாளார



அந்த கடிதத்தில், "ஒரு நன்றியுள்ள இந்தியனின் உணர்வுகள்...லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்காமல் போனதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்.ஆர்பிட்டார் இன்னும் செயல்பாட்டில் உள்ளதை நாம் மறந்து விட வேண்டாம்.


விரைவில் அதன் மூலம் நிலவில் இருந்து புகைப்படங்களை பெறலாம். விக்ரம் நிஜமாக நிலவில் தரையிறங்கி இருந்தால் பிரக்யான் ரோவர் இப்போது வரை உயிர்ப்புடன் உள்ளது.அதனால் அதிலிருந்து கிராபிக்கல் விபரங்களை பெற தயாராக இருப்போம்.

அப்படி நடந்து விட்டால் வெற்றி நமது கைகளிலேயே உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தான் அடுத்த தலைமுறையின் உத்வேகம். இஸ்ரோ, நீங்கள் எங்களின் பெருமை. நன்றியுள்ள தேசத்தின் இதயப்பூர்வமான நன்றிகள் ". இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளான்

No comments:

Post a Comment