டிஜிலாக்கர் வாகனஓட்டிகளுக்கு வரப்பிரசாதம் - டிரைவிங் லைசென்ஸ் பதிவேற்றுவது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 16, 2019

டிஜிலாக்கர் வாகனஓட்டிகளுக்கு வரப்பிரசாதம் - டிரைவிங் லைசென்ஸ் பதிவேற்றுவது எப்படி?

டிஜிலாக்கர், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தினால் வாகன ஓட்டிகளுக்கு பயன்படும்வகையில் கிளவுட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள செயலி ஆகும். இந்த டிஜிலாக்கரில் நாம், நமது டிரைவிங் லைசென்ஸ், வண்டி ஆர்.சி உள்ளிட்டவைகளை அப்லோட் செய்வதன் மூலம், அதனை நாம் டிஜிட்டல் முறையில் வைத்துக்கொள்ளலாம். போக்குவரத்து போலீசார், வண்டியின் ஆவணங்களை கேட்கும்போது, இதனை காண்பித்தாலே போதுமானது .

டிஜிலாக்கரில் டிரைவில் லைசென்ஸ் பதிவேற்றும் முறை

01. முதலில் டிஜிலாக்கர் அக்கவுண்டை உருவாக்கிக்கொள்ள வேண்டும். மொபைல் எண்ணிற்கு வரும் ஒன்டைம் பாஸ்வேர்டின் உதவியுடன் யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டை கொண்டு, புதிய டிஜிலாக்கர் அக்கவுண்டை உருவாக்கிக்கொள்ளலாம்.

2.. டிஜிலாக்கர் அக்கவுண்டை உருவாக்கிய பின்னர், அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து, டிஜிலாக்கரின் மற்ற சேவைகளையும் நம்மால் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

03. பின் Pull Partner Documents என்ற பகுதிக்கு சென்று பதிவேற்றம் செய்ய இருக்கும் ஆவணங்கள் மற்றும் அதன் வகைகள் குறித்த விபரங்களை உள்ளிட வேண்டும்.

4. ஆதார் அட்டையில் உள்ள பெயர் மற்றும் பிறந்ததேதியை நம்மால் எடிட் செய்ய இயலாது. டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வண்டி ஆர்.சி. உள்ள பெயர், ஆதார் அட்டையில் உள்ள பெயருடன் ஒத்துப்போக வேண்டும்.

05. டிரைவிங் லைசென்ஸ் நம்பரை நாம் உள்ளீடு செய்கையில், டிஜிலாக்கர் அதனை சாலை போக்குவரத்து துறை ஆவணங்களுடன் அதை ஒப்பிட்டு பார்க்கும்.

06. உங்களது விபரங்கள், நேஷனல் ரெஜிஸ்டர் டேட்டாபேஸில் சரியாக இருக்கும்பட்சத்தில் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிட்டல் கையெழுத்து, உங்களது டிஜிட்டல் டிரைவிங் லைசென்சில் பதிவாகும்.

07. உங்களது லைசென்ஸ் குறித்த விபரங்கள், நேஷனல் ரெஜிஸ்டர் டேட்டாபேஸில் இல்லாதபட்சத்தில், உங்களால், டிஜிலாக்கர் சேவைகளை பயன்படுத்த இயலாது.

08. வண்டியின் ஆவணங்களை பாதுகாத்தல், மழை, வெயிலில் இருந்து காத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் இருந்து டிஜிலாக்கர் உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.

09. அடையாள மற்றும் முகவரி ஆவணமாக அரசு அலுவலகங்களில் கேட்கும் இடத்தில் இந்த டிஜிலாக்கர் சேவையை பயன்படுத்துவதன் மூலம், நாம் தேவையில்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம்.

10. டிஜிட்டல் ஆர்.சி மற்றும் டிரைவிங் லைசென்ஸ், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிட்டல் கையெழுத்தினை பெறுவது அவசியமாகும். பின் இதன் பிடிஎப் பிரதிநிதியினை நாம் கேட்கும் இடத்தில் காண்பித்துக்கொள்ளலாம். இல்லையெனில் டிஜிலாக்கர் மொபைல் அப்ளிகேசனில் கியூஆர் கோடு தொழில்நுட்பத்தினை பயன்படுத்தியும், நமது ஸ்மார்ட்போனிலேயே, இந்த ஆவணங்களை பெறலாம்

No comments:

Post a Comment