பள்ளியின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றிய முன்னாள் மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, September 1, 2019

பள்ளியின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றிய முன்னாள் மாணவர்கள்

கடலூர் புதுநகரில் செயல்பட்டு வரும் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு சீரமைக்கப்பட்டது.

இந்தப் பள்ளி தனது நூற்றாண்டு விழாவை நிகழாண்டில் கொண்டாட உள்ள நிலையில் முன்னாள் மாணவர்கள் முகநூல் குழுக்கள் மூலம் ஒருங்கிணைந்து வருகின்றனர். அவர்களில் 2001-ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் ராஜா, விஷ்ணு உள்ளிட்டோர் நேரில் வந்து பள்ளியை பார்த்த போது மாணவர்களுக்கு சுகாதாரமான தண்ணீர் தேவை இருப்பதை அவர்கள் அறிந்தனர்.

இப்பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயின்று வரும் நிலையில் அவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக ரூ.2 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டதுஇதனால் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைத்தது.

தற்போது கடந்த இரு ஆண்டுகளாக குடிநீர்சுத்திகரிப்பு அமைப்பு பழுதடைந்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு சுகாதராமான தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த விவரம் தெரிந்த முன்னாள் மாணவர்கள் தங்களுடன் பயின்ற மாணவர்களுடன் தொடர்பு கொண்டு பள்ளியின் குடிநீர் தேவை குறித்து விளக்கினர்.

பின்னர், தாங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர் ஆர்.ராஜேந்திரனை சனிக்கிழமை அழைத்துச் சென்று குடிநீர் சுக்திகரிப்பு கருவியை பார்வையிட்டனர்.பின்னர் அவரின் முன்னிலையில் பழுதடைந்திருந்த சுத்திகரிப்பு குடிநீர் அமைப்பினை ரூ. 50 ஆயிரம் செலவில் சரி செய்தனர்.

முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் மணிமாறன், உதவித்தலைமையாசிரியர் மோகன்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஜயபால் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment