CTET தேர்வு என்றால் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 9, 2019

CTET தேர்வு என்றால் என்ன?

சிடெட் தேர்வு என்றால் என்ன?

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் இடை நிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேருவதற்கு சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்சிடெட் தேர்வை சிபிஎஸ்இ ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.


ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தாள்-1 தேர்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தாள்-2 தேர்வும் நடத்தப்படுகிறது.

மதிப்பெண்; தேர்ச்சி விவரம்:

தாள்-1-தேர்வில் மொழித்தாள்-1, ஆங்கிலம் (மொழித்தாள்-2), கல்வி உளவியல், கணிதம், சுற்றுச்சூழலியல் ஆகிய 5 பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 150 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் மொத்த மதிப்பெண் 150.

தாள்-2 தேர்வில், மொழித்தாள்-1, ஆங்கிலம், கல்வி உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து தலா 30 கேள்விகள் வீதம் 90 கேள்விகள், கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு) பகுதியில் இருந்து 60 கேள்விகள் (சமூக அறிவியல் ஆசிரியர்கள் எனில் சமூக அறிவியல் பாடத்தில் 60 கேள்விகள்) என 150 கேள்விகள் இடம்பெறும். மொத்த மதிப்பெண் 150.

மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் சிடெட் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் (90) பெற்றவர்கள் தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்

No comments:

Post a Comment