GOOGLE WARNING:மறந்தும்கூட இந்த 9 வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்! பெரும் ஆபத்து நிச்சயம். - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, September 18, 2019

GOOGLE WARNING:மறந்தும்கூட இந்த 9 வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்! பெரும் ஆபத்து நிச்சயம்.

அடிப்படைத் தகவல், உணவு, சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மருந்துகளை வாங்குவது வரை அனைத்தையும் கூகிள் சர்ச் இல் தேடும் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

Google Warning: Don't Google Search These 9 Things Ever On Your Smartphone.

இணையப் பயனர்களில் பெரும்பாலானோர், அவர்கள் விரும்பும் எந்த தகவலையும் பெறக் கூகிள் சர்ச் என்ஜினை பயன்படுத்துவதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். அடிப்படைத் தகவல், உணவு, சமையல், ஆன்லைன் வங்கி சேவை, ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் மருந்துகளை வாங்குவது வரை அனைத்தையும் கூகிள் சர்ச் இல் தேடும் பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை.

தேடவே கூடாத 9 பொதுவான விஷயங்கள்

முதலில் கூகுளில் நீங்கள் பார்க்கும் அனைத்து வலைத்தளங்களையும் கூகிள் உருவாக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 உங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் வலைத்தளங்களைத் தேடிப்பிடித்து வழங்கும் ஒரு ஆன்லைன் தளமாக மட்டுமே கூகுள் செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 கூகுளில் தேடவே கூடாத 9 பொதுவான விஷயங்கள் மற்றும் இதனால் ஏற்படும் ஆபத்துகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

1. ஆன்லைன் வங்கி ஆபத்து

உங்கள் வங்கியின் ஆன்லைன் வங்கி வலைத்தளங்களைத் Google இல் தேடுவதைத் தவிர்க்கவும். பிஷ்ஷிங் (phishing) செய்வதற்கான வாய்ப்புகள் கடுமையாக அதிகரித்து வருவதால், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் போல் தோற்றமளிக்கும் போலி வலைத்தளத்தில், உங்கள் வங்கியின் உள்நுழைவு ஐடி மற்றும் பாஸ்வோர்டை என்டர் செய்வதனால் சிக்கலில் சிக்கிகொள்வீர்கள்.


2. கஸ்டமர் கேர் எண்கள் மூலம் ஆபத்து

கூகிளில், நிறுவனங்களின் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்களை ஒருபோதும் தேட வேண்டாம். மோசடி செய்பவர்கள், மோசடி செய்வதற்கான அசல் வாடிக்கையாளர் பராமரிப்பு எண்கள் போன்ற போலி எண்களை வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் வலைக்குள் வீணாய் சிக்கிக் கொள்ளாதீர்கள்.


3. ஆப்ஸ் டவுன்லோட் மூலம் ஆபத்து

உங்களுக்குத் தேவையான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்ய, கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர் போன்ற அதிகாரப்பூர்வ தளங்களிலிருந்து ஆப்-களை டவுன்லோட் செய்யுங்கள். மால்வேர் உடன் கூடிய ஆப்களை டவுன்லோட் செய்வதற்கான வாய்ப்பு கூகுள் தளத்தில் உள்ளது. இதுபோன்ற சிக்கலில் சிக்காமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.


4. மருந்து மற்றும் மருத்துவ அறிகுறிகளை சர்ச் செய்தால் ஆபத்து

கூகிளில் மருந்துகள் அல்லது மருத்துவ அறிகுறிகளை ஒருபோதும் தேட வேண்டாம். அது உங்களின் உயிருக்கே ஆபத்தாய் மாறிவிட கூடும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும் போது, மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆன்லைன் இல் மருந்துகளை நீங்கலாக ஆர்டர் செய்வதையும் தவிர்த்துவிடுங்கள். மருத்துவ அறிகுறிகள் அனைத்தும் கூகுளில் துல்லியமாக இருக்காது என்பதை நினைவில் வையுங்கள்.


5. தனிப்பட்ட நிதி மற்றும் பங்குச் சந்தை ஆபத்து

ஆரோக்கியத்தைப் போலவே, தனிப்பட்ட நிதி ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது, அனைவரையும் பணக்காரர்களாக மாற்றும் ஒரு முதலீட்டுத் திட்டம் ஒருபோதும் இருக்க முடியாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனவே, முதலீடு செய்யும் போது கூகிள் தேடல் முடிவுகளிலிருந்து ஆலோசனையைப் பெறுவதைத் தவிர்த்துவிடுங்கள்.

6. அரசாங்க வலைத்தளங்கள் மூலம் ஆபத்து

வங்கி வலைத்தளங்களைப் போலவே, நகராட்சி வரி, மருத்துவமனைகள் போன்ற அரசாங்க வலைத்தளங்கள் தான், மோசடி செய்பவர்களின் பிரதான இலக்குகளாகும். எனவே சரியான URL உங்களுக்குத் தெரிந்தால் நேரடியாக அந்த தளங்களுக்குச் செல்லுங்கள். போலியான மோசக்காரர்களின் வலைத்தளங்களில் சிக்கிக்கொள்ளாதீர்கள்.

7. சமூக வலைத்தள லாகின் ஆபத்து

சமூக வலைத்தள அக்கௌன்ட்களை கூகிளில் இருந்து லாகின் செய்யாதீர்கள். சமூக வலைத்தள ஆப்-கள் மூலம் எப்போதும் லாகின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது, கூகுள் மூலம் லாகின் செய்வது ஃபிஷிங்கிற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.


8. ஈ-காமர்ஸ் வலைத்தள ஆபத்து

ஈ-காமர்ஸ் வலைத்தளங்களில் கிடைக்கும் சலுகைகளுக்கான இலவச கூப்பன் தளங்கள் மற்றும் போலி ஈ-காமர்ஸ் வலைத்தளங்கள் கூகிள் தேடலில் அதிகரித்து வருகின்றன. இந்த தளங்களை கிளிக் செய்தால், உங்களின் ஆன்லைன் வங்கி விபரங்கள் திருடப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

9. ஆன்டி-வைரஸ் ஆபத்து

ஆபத்திலிருந்து தடுப்பதற்கு தானே ஆன்டி-வைரஸ் பயன்படுத்துகிறோம். அதில் என்னப்பா சிக்கல் என்று கேட்குறீங்களா? காரணம் இருக்கு, இலவசமாகக் கிடைக்கும் ஆன்டி-வைரஸ் இல் ஆபத்து இருக்கு. இலவசமாகக் கிடைக்கும் எதோ ஒன்றின் பின்னால், நிச்சயம் நீங்கள் ஏமாற்றப்படுவீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.




No comments:

Post a Comment