தமிழக அரசுக்கு மத்திய அரசின் 11 விருதுகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 23, 2019

தமிழக அரசுக்கு மத்திய அரசின் 11 விருதுகள்

உள்ளாட்சி அமைப்பு களில், சுகாதாரம் மற்றும் நிர்வாகம் ஆகியவை தொடர்பான பணிகளில் சிறந்து விளங்கியதற்காக, மத்திய அரசின் 11 விருதுகளை தமிழக அரசு பெற்றுள்ளது

.உள்ளாட்சி அமைப்பு களின் மிக முக்கிய பணிகளான, அடிப்படை சுகாதாரம் மற்றும் கட்டமைப்புக்கான நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாநி லங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசுகள் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன



.பல்வேறு விதிமுறை களின் கீழ், உள்ளாட்சி அமைப்புகளின் தரம், நிர்வாகச் சேவை நிர்ணயம் செய்யப்பட்டு, இந்த விருதுகளுக்கு, மாநிலங்கள் தேர் வாகின்றன. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று டில்லியில் நடைபெற்றது.பூசா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரம் மற்றும் நிர்வாகம் ஆகியவை தொடர்பான பணிகளில் சிறந்து விளங்கும் மாநிலமாக, தமிழகம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான விருதை, மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், நரேந்தர்சிங் தோமரிடமிருந்து, தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, பெற்றார்.


இதுதவிர, மாவட்ட அளவில், சிறந்து விளங்கும் பஞ் சாயத்துக்கான விருதை, தமிழகத்தின் சேலம் மாவட்டம் பெற்றுள்ளது. மேலும், ஆறு ஊராட்சிகள் உள்பட, ஒன்பது கீழ்நிலை உள்ளாட்சி அமைப்புகளுக்குமாக, மொத்தம், 11 விருதுகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டன.பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் வேலுமணி கூறுகையில், '' உள்ளாட்சி அமைப்புகளில் 10 விதமான தகவல் தொழில் நுட்ப சேவைகளை பாராட்டி, 'இ - புரஸ்கார்' விருதை தமிழகத்துக்கு மத்திய அரசு தந்துள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment