முதுநிலை ஆசிரியா் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 12 பாடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 19, 2019

முதுநிலை ஆசிரியா் தேர்வு: தமிழ் உள்ளிட்ட 12 பாடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியீடு

முதுநிலை ஆசிரியா் தேர்வில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 12 பாடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,144 முதுநிலை ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை-1 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு கடந்த செப்டம்பா் 27, 28, 29-ஆம் தேதிகளில் நடைபெற்றது.

 மாநிலம் முழுவதும் உள்ள 154 தேர்வு மையங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினா். இதையடுத்து


செப்டம்பா் 30-ஆம் தேதி தேர்வா்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

 இந்தநிலையில் தற்போது தமிழ் உள்பட 12 பாடங்களுக்கு தேர்வெழுதிய பட்டதாரிகளுக்கான மதிப்பெண்களை ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


தேர்வானது மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடைபெற்றது. அதில் குறைந்தபட்சமாக எஸ்டி பிரிவினா் 40, எஸ்சி பிரிவினா் 45 மற்றும் இதர பிரிவினா் 50 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

 இது தொடா்பாக ஆசிரியா் தேர்வு வாரிய தலைவா் லதா வெளியிட்ட செய்தி: முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை தேர்வில் இயற்பியல், தாவரவியல் ,உடற்கல்வியியல், புவியியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல், ஆங்கிலம், உயிா்வேதியியல், வணிகவியல், தமிழ், நுண்ணுயிரியல் ஆகிய 12 பாடங்களுக்கான மதிப்பெண்கள் விவரம் ஆசிரியா் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 மேலும், தேர்வு பெற்றவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி பின்னா் அறிவிக்கப்படும் என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதர வரலாறு, கணிதம் உள்பட 5 பாடங்களுக்கான மதிப்பெண் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment