15 நிமிடம் கை தட்டி உலக சாதனை: அசத்திய அரசு பள்ளி மாணவர்கள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, October 5, 2019

15 நிமிடம் கை தட்டி உலக சாதனை: அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்

கோவை அருகே 77 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 15 நிமிடம் இடைவிடாமல் கை தட்டி உலக சாதனை நிகழ்த்தினர்.பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சிறுவயதில் ஏற்படும் மன அழுத்தம், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட உளவியல் கோளாறுகளை சீராக்க சென்னை அபயம் அறக்கட்டளை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வட்டாரக்கல்வித்துறை இணைந்து மாணவ, மாணவிகளுக்கான கைதட்டும் போட்டி நடத்தியது.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் என, மொத்தம், 77 பள்ளிகளில் பயிலும், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்

வெள்ளிக்கிழமைகாலை, 9.00 முதல் 9.15 மணி வரை ஒரே நேரத்தில், 77 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியரும் அந்தந்த பள்ளிகளில் கை தட்டினர். இதை அந்தந்த பள்ளிஆசிரியர்கள் கண்காணித்தனர்.

சரியாக, 9.15 மணிக்கு மாணவ, மாணவியர் கை தட்டலை நிறுத்தினர்.இச்சாதனை, 'கலாம் புக் ஆப் ரிக்கார்ட்ஸ்' என்ற சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது

No comments:

Post a Comment