பிளஸ் 2 பாடம்: 4ம் வகுப்பு மாணவி அசத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 2, 2019

பிளஸ் 2 பாடம்: 4ம் வகுப்பு மாணவி அசத்தல்

பொள்ளாச்சியில், நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி, பிளஸ்1, பிளஸ்2வில் தனிம வரிசை அட்டவணையை அழகாக சொல்லி காண்பித்து அசத்துகிறார்.


பொள்ளாச்சி பக்கோதிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆங்கில வழியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யஸ்ரீ.சமீபத்தில் என்.ஜி.எம்., கல்லுாரியில், லயன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி மற்றும் அழகப்பா பல்கலை பயிற்சி மையம் சார்பில் நடந்த ஆசிரியர் தின விழாவில், தனிம வரிசை அட்டவணையை சொல்லி அசத்தினார்.மாணவியை, பள்ளி தலைமையாசிரியர் ரீட்டா ஏஞ்சலின், உதவி ஆசிரியர் கண்ணன் மற்றும் பலரும் பாராட்டினர்


.மாணவி திவ்ய ஸ்ரீ கூறுகையில், ''தனிம வரிசை அட்டவணையில் உள்ள குறியீடுகள், பெயர்களை ஆசிரியர்கள் கூறிய போது, அவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் வந்தது.''ஆசிரியர்கள் உதவியுடன் மூன்றாம் வகுப்பில் இருந்து முறையான பயிற்சி எடுத்ததால், இதனை எளிதாக கற்க முடிந்தது,'' என்றார்.


உதவி ஆசிரியர் கண்ணன் கூறுகையில், ''தனிம வரிசை அட்டவணையில், 118 குறியீடுகள் மற்றும் பெயர்கள் உள்ளன

மாணவர்களிடம் கற்கும் திறன், நினைவுத்திறனை சோதிக்கும் வகையில், அவ்வப்போது சில பாடங்களை சொல்லி கொடுப்பது வழக்கம்.''அதுபோன்று, வேதியியல் பாடத்தின் முக்கியத்துவம் அறியும் வகையில், இந்த அட்டவணையை சொல்லி கொடுத்தேன்.''பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் கற்க கூடிய தனிம வரிசை அட்டவணையில் உள்ள குறியீடுகள், பெயர்களை மாணவி திவ்ய ஸ்ரீ கற்றுக்கொண்டார்,'' என்றார்.

No comments:

Post a Comment