2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது: வங்கி அதிகாரிகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, October 23, 2019

2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது: வங்கி அதிகாரிகள்

ஜனவரி 1 முதல் 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் தகவல் போலியானது' என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


.'ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் 1000 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. இதனால் 2000 ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும். எனவே ஒவ்வொருவரும் தங்களிடமுள்ள 2000 ரூபாய் நோட்டுகளை உடனடியாக மாற்றி விட வேண்டும்' என சமூக வலை தளங்களில் ஆடிட்டர் ஒருவர் பெயரில் தகவல் பரவி வருகிறது.


இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது

:சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. அதுபோல 1000 ரூபாய் நோட்டு வெளியிடுதல் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுதல் போன்ற எந்த அறிவிப்பையும் ரிசர்வ் வங்கியோ மத்திய அரசோ வெளியிடவில்லை.

மக்களை குழப்பவே இது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப் படுகின்றன.சமீபத்தில் புதிய 1000 ரூபாய் நோட்டு புகைப்படம் உலா வந்தது. தற்போது இது போன்ற தகவல்கள் பரவுகின்றன


. இவற்றை பொது மக்கள் நம்ப வேண்டாம். மத்திய அரசும் போலீசாரும் இது போன்ற போலி தகவல்களை வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment