2020-இல் அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, October 22, 2019

2020-இல் அரசு விடுமுறை நாட்கள்: தமிழக அரசு அறிவிப்பு

வரும் 2020-ஆம் ஆண்டு 22 நாள்கள் பண்டிகைக்கால விடுமுறை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட சமயம் சார்ந்த பண்டிகைகளும், சுதந்திர தினம், குடியரசு தினம் அரசு சார்பாக கொண்டாடப்படும் விழாக்களும் வரக் கூடிய தேதிகள் மற்றும் அதுகுறித்த விடுமுறைகளின் அறிவிப்பை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.

அதன் விவரம்:
ஆங்கிலப் புத்தாண்டு (ஜனவரி 1) புதன்கிழமை
பொங்கல் (ஜனவரி 15) புதன்கிழமை
திருவள்ளுவர் தினம் (ஜனவரி 16) வியாழக்கிழமை
உழவர் திருநாள் (ஜனவரி 17) வெள்ளிக்கிழமை

குடியரசு தினம் (ஜனவரி 26) ஞாயிற்றுக்கிழமை
தெலுங்கு வருடப் பிறப்பு (மார்ச் 25) புதன்கிழமை
மகாவீரர் ஜயந்தி (ஏப்ரல் 6) திங்கள்கிழமை
புனித வெள்ளி (ஏப்ரல் 10) வெள்ளிக்கிழமை
தமிழ்ப்புத்தாண்டு மற்றும்
பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14) செவ்வாய்
மே தினம் (மே 1) வெள்ளிக்கிழமை

ரம்ஜான் (மே 25) திங்கள்கிழமை
பக்ரீத் (ஆகஸ்ட் 1) சனிக்கிழமை
கிருஷ்ண ஜயந்தி (ஆகஸ்ட் 11) செவ்வாய்
சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) சனிக்கிழமை
விநாயகர் சதுர்த்தி (ஆகஸ்ட் 22) சனிக்கிழமை
மொஹரம் (ஆகஸ்ட் 30) ஞாயிற்றுக்கிழமை

காந்தி ஜயந்தி (அக்டோபர் 2) வெள்ளிக்கிழமை
ஆயுத பூஜை (அக்டோபர் 25) ஞாயிற்றுக்கிழமை
விஜயதசமி (அக்டோபர் 26) திங்கள்கிழமை
மிலாதுநபி (அக்டோபர் 30) வெள்ளிக்கிழமை
தீபாவளி (நவம்பர் 14) சனிக்கிழமை
கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25) வெள்ளிக்கிழமை

No comments:

Post a Comment