2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை மொபைல் ஆப் மூலம் நடத்த திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, October 11, 2019

2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை மொபைல் ஆப் மூலம் நடத்த திட்டம்

வரும் 2021ம் ஆண்டு நடத்தப்பட உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு, பேனா, பேப்பரை பயன்படுத்தாமல் மொபைல் ஆப் மூலமாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது.  இந்தியாவின் மக்கள் தொகை கடந்த 2011ம் ஆண்டு  நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 121 கோடி. இது, கடந்த 2016ம் ஆண்டு 132 கோடியாக உயர்ந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ம் ஆண்டு நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய,  மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர்களின் அகில இந்திய மாநாடு டெல்லியில் கடந்த புதன் மற்றும் வியாழக் கிழமைகளில் நடந்தது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட  அறிக்கையில் கூறியதாவது:


வரும் 2021ம் ஆண்டு நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, வழக்கமான பேனா, பேப்பரை பயன்படுத்தாமல் மொபைல் ஆப் மூலம் நடத்தப்பட உள்ளது. இதில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்களை  அனுப்புவது குறித்து இந்த மாநாட்டில் விளக்கப்பட்டது.

 2021 மார்ச் 1ம் தேதி கணக்குப்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும், பனி விழும் மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவற்றில் 2020  அக்டோபர் 1ம் தேதியிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுடன், தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி விளக்கினார். இதற்கான பயிற்சிகள் வரும் 14ம்  தேதி முதல் தொடங்குகிறது.

இது குறித்து மாநிலங்களின் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் 16 மொழிகளில், ரூ.12 ஆயிரம் கோடி செலவில்  மேற்கொள்ளப்பட உள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment