குரூப்-2 தேர்விற்கான பாடத்திட்டத்தில் 100 மதிப்பெண்களுக்கான தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
குரூப்-2 தேர்விற்கான பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதற்கு எதிராக மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் ஏற்கனவே இருந்த பாடதிட்டத்தின் படி 100 வினாக்கள் தமிழ் பாடத்திலிருந்தும், 75 வினாக்கள் பொது அறிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்திலிருந்தும் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறையானது சமீபத்தில் மாற்றப்பட்டு, 175 வினாக்கள் பொது அறிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்திலிருந்தும் கேட்கப்படும் என புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதே போல் குரூப் -2 மெயின்ஸ் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த மாற்றமானது கிராமப்புற மாணவர்களை பெருமளவில் பாதிக்கும் என்பதால், குரூப் 2 பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் வினாக்கள் நீக்கப்பட்டதை சட்டவிரோதம் என அறிவித்து பழைய முறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலர் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:
Post a Comment