ஐயூசி கட்டணத்தை தொடர்ந்து ஜியோவின் 2 பிளான்கள் நீக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, October 20, 2019

ஐயூசி கட்டணத்தை தொடர்ந்து ஜியோவின் 2 பிளான்கள் நீக்கம்

நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக அவுட்கோயிங் அழைப்புகளுக்கு வசூலிக்கபடும் என ஜியோ அறிவித்ததை தொடர்ந்து, தற்பொழுது குறைந்த கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த ரூ.19 மற்றும் ரூ.52 பிளான்களை நீக்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஆரம்ப கட்ட பிளான் ரூ.98 முதல் மட்டுமே தொடங்குகின்றது.


மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் ரூ.10 முதல் ரூ.1000 வரை ஐயூசி டாப் அப் கட்டணங்கள் வெளியிடப்பட்டுள்ளது.


ரூ.10-ல் தொடங்குகின்ற பிளானில் 124 நிமிடங்கள் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ள இயலும்.


ரிலையன்ஸ் ஜியோ, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக வரம்பற்ற காம்போ மற்றும் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களுடன், நன்மைகளைப் பொறுத்தவரை, எந்த FUP வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்க ரூ.19 பிளானில் 150MB டேட்டாவுடன் மற்றும் 20 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ஒரு நாள் வேலிடிட்டி வழங்கப்படும்


. ரூ. 52 பிளானில் 1.05 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 70 எஸ்எம்எஸ் ஒரு வாரம் அல்லது ஏழு நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

இனி, குறைந்தபட்சமாக ரிலையன்ஸ் ஜியோவின் வரம்பற்ற காம்போ பேக்குகள் ரூ.98 முதல் தொடங்குகின்றன, மேலும், 2 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

No comments:

Post a Comment